இராணுவ முகாம்களை அகற்றி காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று

இராணுவ முகாம்களை அகற்றி காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் இடங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை விலக்கிக் கொள்ள கூறி, வவுனியா இளைஞர் கழகத்தினால் வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிரில் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள முகாம்களை தாம் ஆட்சிக்கு வந்த உடனேயே நீக்குவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அரசின் மீதுள்ள நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் இடங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றும் வரையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் வவுனியா இளைஞர் கழகம் கூறியுள்ளது.

(அத தெரண தமிழ்)இராணுவ முகாம்களை அகற்றி காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் இடங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை விலக்கிக் கொள்ள கூறி, வவுனியா இளைஞர் கழகத்தினால் வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிரில் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

(அத தெரண)