இராயப்பு ஜோசப் ஆண்டகை பதவி துறந்தார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இராயப்பு ஜோசப் ஆண்டகை பதவி துறந்தார்

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று (14) முதல் அவர் ஓய்வு பெறுவதாக மன்னார் மறைமாவட்ட திருச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரை, வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் ஆவார்.

1992ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்ற வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை 24 எவருடங்களாக மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்துள்ளார்.

(அத தெரண)