இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நடுவர்களின் விபரம் இதோ!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நடுவர்களின் விபரம் இதோ!

உலகக்கிண்ண T20 இறுதிப் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதுகின்றன.

இதற்கான நடுவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

கள நடுவர்களாக குமார் தர்மசேன (இலங்கை), ராட் டக்கர் ஆகியோரும் 3 ஆம் நடுவராக மராய்ஸ் எராமசும் பணியாற்றவுள்ளார்கள். ப்ரூஸ் ஆஸ்சன்போர்ட் 4 ஆவது நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

ரஞ்சன் மதுகல்ல (இலங்கை) போட்டி ரெஃப்ரியாகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் பெண்கள் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண T20 போட்டிக்கான நடுவர் பட்டியலையும் ICC அறிவித்துள்ளது.

அலீம் தார் மற்றும் ரிச்சர்ட் இலிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக செயற்படுவார்கள்.

நிகல் லியாங் மூன்றாம் நடுவராகவும், ப்ரூஸ் ஆக்சன்போர்ட் நான்காவது நடுவராகவும் செயற்படுவார்.

இந்தப் போட்டிக்கும் ரஞ்சன் மதுகல்ல ரெஃப்ரியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.