இலகுவாக லண்டன் செல்ல புதிய திட்டம் – புதிய விசா நடைமுறை


இலகுவாக லண்டன் செல்ல புதிய திட்டம் – புதிய விசா நடைமுறை

உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு (லண்டன் செல்ல) செல்வதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இவ்வாறு லண்டன் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டின் பிரஜையும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடையவராக கருதப்படுவதுடன், விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு வேலை வாய்ப்புகள் அவசியமில்லை எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பட்டத்தின் தகைமைக்கமைய விண்ணப்பதாரர்களின் விசா காலம் நீடிக்கப்படுமெனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கோவிட் விதிமுறையை மீறியதால் அபராதம்

லண்டன் செல்ல எண்ணியுள்ளவர்களுக்கு விஷேட அறிவிப்பு