இலங்கைக்கு பாரிய ஆபத்து! மஹிந்தவின் விஸ்வரூபம்! ஜோதிடர் பரபரப்பு தகவல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கைக்கு பாரிய ஆபத்து! மஹிந்தவின் விஸ்வரூபம்! ஜோதிடர் பரபரப்பு தகவல்

உலக நாடுகளில் அதன் சிறப்பான அரசியல் தளத்தை தீர்மானிக்கும் சக்தியாக கல்விமான்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இருப்பார்கள்.

ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் மூடநம்பிக்கை கொண்ட ஜோதிடமே அரசியலை தீர்மானிக்கின்றது.

அண்மைக்காலமாக பல்வேறு ஜோதிடர்களின் தமது கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தமது அரசியல் தேவைக்கு ஏற்ப கருத்து வெளியிட்டு வருகின்றமை புலனாகிறது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கிரகநிலை மாற்றத்திற்கு அமைய இலங்கை பாரிய ஆபத்தொன்றுக்கு முகங்கொடுக்கும் என பிரபல சோதிடர் மஞ்சுல பீரிஸ் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இந்நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் பிரவேசம் மிகவும் எழுச்சிகரமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

கன்னி ராசியை கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் தீவிரமான அரசியல் பயணம் சாதகமான நிலைக்கு செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

பெருமளவு மக்கள் சக்தியின் ஆதரவுடன் மஹிந்த அரசியல் பயணம் அமையும். நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

இதற்கு முன்னர் என்றும் இல்லாத அளவு மக்கள் ஈர்ப்புடன் புதிய அரசியல் பயணத்துக்கான புதிய கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமகால ஜனாதிபதி அடுத்த வருடத்துடன் உயிரிழந்து விடுவார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதியாவர் என இன்னொரு ஜோதிடர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதேவேளை இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகளை ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமையவே முன்னெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.