இலங்கையின் பிரபல தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு


இலங்கையின் பிரபல தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

இலங்கையின் பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து இன்றய தினம் (05.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 45 வயதுடைய ஒனேஷ் சுபசிங்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலதிபர் தனது குடும்பத்துடன் ஜகார்த்தாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித காரணங்களும் கண்டறியப்படவில்லை என பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஜகார்த்தா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.