இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை


இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பிரேரணையை ரஷ்யா முன்வைத்துள்ளதுடன், அதற்கான உடன்படிக்கையையும் முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இது அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான செயற்திட்டமாகும்.

அமைச்சரவையால் முன்பே அங்கீகாரம் வழங்கப்பட்ட விடயமாக கருதப்படுவது, இலங்கையின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அணுசக்தியை மாற்றீடாக பரிசீலிக்க ஆகும்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 09 செயற்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் அணுமின் நிலையத்திற்கான ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இவ்வாறானதொரு பின்னணியில் அமைந்துள்ளது.

ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், ரஷ்ய நிபுணர்கள் குழுவொன்று இந்த மின் நிலையத்தை இயக்குவதுடன், அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு மூன்று வருடங்களுக்குள் இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்கும்.

இதனடிப்படையில், ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று சிறிய கடல் அணு மின் நிலையங்களைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியம் உள்ளது என்று இலங்கை அணுசக்தி சபையின்; தலைவர் ரோசா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முதலீடுகள், சலுகை காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்காக பங்களாதே{டன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தத்தை இலங்கை தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.