வளி மாசடைவதல் – நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு – வீட்டை விட்டு வௌியேறும் போது முகக்கவசம் அணியவும்


வளி மாசடைவதல் – நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு – வீட்டை விட்டு வௌியேறும் போது முகக்கவசம் அணியவும்

இலங்கையில் கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைதல் காரணமாக அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் போது முகக்கவசத்தை அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமூகத்தில், சுவாசம், நுரையீரல் அல்லது இதய ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு வரம்பில் (151-200) இருந்தால் அல்லது குறைந்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் வெளியில் வேலை செய்வதையோ அல்லது செயல்பாடுகளையோ தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

அத்துடன் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் உள்ளவர்கள் வெளிப்புறங்களில்; செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் காற்றின் தரச் சுட்டெண், ஆரோக்கியமற்ற நிலையை நோக்கி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையின் பல நகரங்களில்,காற்றின் தரச்சுட்டெண் 150 – 200 வரையாக நிலவுகிறது.

இதனையே ஆரோக்கியமற்ற நிலை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரச்சுட்டெண் என்பது, இந்த மாசுபாடுகள் தரை மட்ட ஓசோன், துகள் மாசுபாடு, கார்பன் மோனாக்சைட், சல்பர் டை ஒக்சைட் மற்றும் நைட்ரஜன் டை ஒக்சைட் ஆகிய ஐந்து முக்கிய காற்று மாசுபடுத்திகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

கொழும்பில் தற்போது பனிமூட்டம் போன்றதொரு நிலையை பகல் நேரத்திலும் காணக்கூடியதாக உள்ளது.

எனினும் இந்த பனிமூட்டம் போன்றதொரு நிலையானது காலநிலை காரணமாக ஏற்பட்டதல்ல எனவும், இலங்கையில் வளி மாசடைதல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரித்ததன் காரணமாக கொழும்பின் பல பகுதிகள் புகையால் மூடப்பட்டுள்ளன.