இலங்கையுடனான போட்டியில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கையுடனான போட்டியில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜே.எம். பெய்ர்ஸ்டோ 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதலாவது போட்டி நேற்று ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.