இலங்கையுடனான 1974, 76ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கையுடனான 1974, 76ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்

கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயப் பணிகளை தமிழக மீனவர்களுடன் கலந்தாலோசித்து நடத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத் தீவு தொடர்பாக இலங்கையுடன் 1974, 76ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்துசெய்ய வேண்டுமென்றும் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை, பிரதமர்களை, முதல்-அமைச்சர் நேரிலும், கடிதம் வழியாகவும் கேட்ட வண்ணம் இருக்கிறார்.

அதன்படி தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த வாரம், பிரதமர் நரேந்தி மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய அறிக்கையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத தெரண தமிழ்