தமிழகத்தில் உள்ள தாபதி புனர்வாழ்வு மையத்தில் 20 வயதான இலங்கை ஏதிலி ஒருவர், காவல்துறை விசாரணையின் போது, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
எட்டயபுரம் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழிலில் ஓவியரான குறித்த இலங்கையர், 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பழனியில் உள்ள ஆலயம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே காவல்துறை விசாரணை இடம்பெற்றது.
இதன்போதே இலங்கை ஏதிலி, உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.