இலங்கை கிரிக்கட்டில் சனத் மற்றும் அரவிந்தவிற்கு முக்கிய பதவிகள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கை கிரிக்கட்டில் சனத் மற்றும் அரவிந்தவிற்கு முக்கிய பதவிகள்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது.

அத்துடன், மேலும் சில புதிய நியமனங்களை வழங்கவும் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அதன் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது திலங்க சுமதிபால தெரிவித்ததாவது,

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆலோசகராக செயற்படுமாறு நாம் அரவிந்த டி சில்வாவிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அத்துடன், அடுத்த சுற்றுப்பயணத்திற்கு சரித் சேனாநாயக்கவை முகாமையாளராக நியமிக்கவும் தீர்மானித்துள்ளோம்.

 

எம்முடன் இணைந்து செயற்படுமாறு கிரிக்கெட் விளையாட்டிற்காக பாரிய சேவையாற்றிய சனத் ஜயசூரியவிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவின் தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்குமாறு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுக்கிறது.

என்றார்.