மின்சார சபை ஊழியர்களின் அதிரடி தீர்மானம் – நாடு இருளாகுமா?


மின்சார சபை ஊழியர்களின் அதிரடி தீர்மானம் – நாடு இருளாகுமா?

8 மணி நேர வேலை நேரத்துக்கு பின்னர் ஏற்படும் அவசர மின்வெட்டுகளை சரிசெய்வதில் இருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதிமுதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் மாலை 4.15-க்கு பின்னர் ஏற்படக்கூடிய திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கை இன்று வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், கடமை நேரத்தின் பின்னர் எவ்வித சேவைகளிலும் இன்று முதல் ஈடுபட போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.