இலங்கை ரூபாய் மதிப்பு அதிரடி வீழ்ச்சி


இலங்கை ரூபாய் மதிப்பு அதிரடி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு மேலும் அதிரடி வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 272 ரூபாய் 06 சதமாகும். அதன் விற்பனை விலை 282 ரூபாய் 49 சதமாகும்.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் வாங்கும் விலை 359 ரூபாய் 08 சதங்களாகவும் விற்பனை விலை 372 ரூபாய் 68 சதமாக காணப்படுகின்றது.

மேலும், யூரோவொன்றின் வாங்கும் விலை 302 ரூபாய் 66 சதமாகும். விற்பனை விலை 313 ரூபாய் 56 சதமாகும்.