இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி


இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றை 330 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 327 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபா 03 சதம். விற்பனை பெறுமதி 427 ரூபா 91 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 359 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.