இளையோரிடம் தற்போது வன்முறை அளவு அதிகரிப்பு


இளையோரிடம் தற்போது வன்முறை அளவு அதிகரிப்பு

இளையோரிடம் வன்முறை அளவு அதிகரித்து

இளையோரிடம் வன்முறை அளவு அதிகரித்து

இளையோரிடம் தற்போது வன்முறை அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன்-ஹொப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சுகாதார பிரிவின் ஆலோசகர் கலாநிதி சஞ்சய் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

3 காரணிகளால் இளையோரிடம் வன்முறை மனநிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொவிட் பரவலை எதிர்கொண்டு, இளையோர் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை, பெற்றோரின் உளவியல் அழுத்தங்களும் பிள்ளைகள் ஊடாக வெளியிடப்படுகின்றமை மற்றும் போராட்டங்கள், எதிர்ப்புகள் என்பன காரணமாக இளையோரின் மனநிலை வன்முறையாக மாறியுள்ளதாக கலாநிதி சஞ்சய் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.