ஈக்வே​டோரில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பீதியில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஈக்வே​டோரில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பீதியில்

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடோர் நாட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு நிலவரப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

2,500-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதனால் மக்கள் பீதியடைந்து பதற்றத்துடனும் பீதியுடனும் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.