உங்களுக்கு எது தேவையோ அதனைத் தர நான் தயார்; மஹிந்த

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


உங்களுக்கு எது தேவையோ அதனைத் தர நான் தயார்; மஹிந்த

உங்களுக்கு எது தேவையோ அதனைத்தர நான் தயாராக இருக்கின்றேன் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் புதிய மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளிலேயே இந்த எதிர்ப்பு கூட்டம்  நடைபெற்றது.

மேலும் மக்கள் யாரும் பயப்படவேண்டாம் எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்மிடம் வந்து இணைந்து கொள்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை கூடிய விரைவில் அவர்கள் எம்மிடம் வந்து சேரவேண்டிய நிலை ஏற்பட்டு விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது நல்லாட்சி என்ற பெயரில் மோசமான ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆட்சி ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலேயே என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

மூழ்கப்போகும் கப்பலில் எவரும் பயணிக்க விரும்ப மாட்டார்கள் அதனால் அடுத்த ஆட்சி கூட்டு எதிர்க்கட்சியின் ஆட்சியே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.