உடல் ஒல்லியாக இருக்க காரணம் என்ன?


உடல் ஒல்லியாக இருக்க காரணம் என்ன?

உடல் ஒல்லியாக இருக்க காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். உடல் மெலிந்திருப்பது சிலருக்கு பாரிய தலையிடியாகவும், மன வேதனையாகவும் இருக்கும்.

பொதுவாக, உடல் எடை குறைந்திருப்பது, உடல் மெலிந்திருப்பது, ஒல்லியான உடல் கொண்டிருப்பது நோயாகக் கருதப்படுவதில்லை.

ஆனாலும் உடல் எடை குறைவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மறதி நரம்பு தளர்ச்சி ஆகியன நேரும்.

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது.

ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள்.

அத்தகையவர்களுக்கு திடீரென உடல் எடை குறைய, உடல் இளைத்தல் ஆரம்பிக்கும்.

ஆனால் இவ்வாறு எந்த காரணம் இல்லாமல்  உடல் மெலிந்திருப்பது, திடீரென உடல் எடை குறைய ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில் பொதுவாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, உடல் எடை குறைவு ஒரு பெரிய அறிகுறி என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ஒல்லியாக இருக்க காரணம் – மெலிந்து இருக்க காரணம்

வெவ்வேறு காரணங்களால் உடல் எடை குறையும். அக்னி குறைதல், பத்திய உணவு எடுத்து கொண்டிருப்பது, அதிகமாக உண்ணா நோன்பு இருப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், அதிக வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி ஆகியன காரணமாக எடை குறைதல் நேரலாம்.

உளவியல் ரீதியான அதிக மன வருத்தம், மன உளைச்சல், அதிகப்படிப்பு, மூளையை பயன்படுத்தி அதிக வேலை செய்தல் ஆகியனவும் உடல் மெலிந்து இருக்க காரணம்.

உடல் ஒல்லியாக இருக்க காரணம் பட்டினி இருப்பது தான். சிலருக்கு பசியின்மையினால், உடலுக்கு அன்றாடம் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், ஒல்லியான உடல் அல்லது உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

உண்மையில் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் சரியான உணவுகளை உட்கொண்டு எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டாலும், உடல் இளைத்தல் அல்லது குறைய காரணமாக இருக்கும். பொதுவாக, உடல் நலனுக்கு தூக்கம் அவசியம்.

நமது உடலுக்கு எவ்வளவு நேரத்தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அத்தனை நேரம் தூங்குவது நல்லது. குறித்த நேரத்தில் தூங்குவதும், எழுவதும் மிகவும் அவசியம்.

செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படுவது அப்போதே நன்கு தெரியும்.

உடலில் சர்க்கரை நோய்/நீரிழிவு வந்திருப்பதை, உடல் திடீரென்று மெலிவடைவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். காசநோய் பிரச்சனை இருந்தால், உடலானது மெலிய ஆரம்பிக்கும்.

தைராய்டு பிரச்சனையும் உடல் எடையை குறைப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. கல்லீரல் அல்லது கணையத்தில் அழற்சிகள் இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும்.

உடலில் புற்றுநோய் கட்டிகள் அல்லது வயிற்றில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

தமது உடல் எடையை கூட்ட என்ன செய்வது என்று தேடுபவர்களுக்கு, உடல் எடையை கூட்ட டிப்ஸ், வழிகள் என்ன என்று கீழே பார்ப்போம்.

உடல் எடையை அதிகரிப்பது எப்படி? உடல் எடை அதிகரிக்க எளிய வழிகள்

தங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவது அவசியமான செயல் ஆகும்.

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள்.

உடல் எடையைக் கூட்டுவதற்கு, முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு, உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கும் பேரீச்சைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரீச்சையை அதிகளவு சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரிக்க முடியும்.

உடலின் எடையை கூட்ட வேர்க்கடலை ஒரு முக்கியமான உணவாகும்.

தினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.

பாதாமிற்கு இணையான ஊட்டச்சத்தினைக் கொண்டிருப்பதனால் பாதாமின் சுவை பிடிக்காதவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

உடல் எடையைக் கூட்டுவதற்கு உலர்திராட்சையில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக விட்டமின் C, இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது.

மேலும் முடி வளர்ச்சியை தூண்டவும், உடல் சதை அதிகரிக்க மிக சிறந்த ஒன்றாக உலர்திராட்சை இருக்கின்றது.

உடல் சதை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் 4 அல்லது 5 எள்ளு மிட்டாயை சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் மிக எளிதில் உடல் சதை அதிகரிக்க முடியும்.

உடல் எடையை கூட்ட என்ன செய்வது என்று நினைப்பவர்கள், பால் கொழுப்புச் சத்து அதிகம் மிகுந்த உணவு என்பதால் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

காலை மற்றும் இரவு கட்டாயம் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

குறிப்பாக சுடவைத்த பாலில் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும். டீ அல்லது காபித்தூள் கலப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த டீ மற்றும் காபித்தூளை சேர்க்கும் பொழுது, பாலின் சத்து நமது உடலுக்கு கிடைப்பதில்லை, எனவே, அதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை கூட்ட என்ன செய்வது என்று நினைப்பவர்கள், வாரத்தில் ஏழு நாட்களில் குறைந்தது 4 நாட்களாவது மதிய உணவில் தயிர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் கொழுப்பு நிறைந்த உணவென்பதால் உடல் எடை விரைவாக அதிகரிக்க உதவும்.

வாழைப்பழம் அதிகக் கலோரிகள் கொண்ட ஓர் உணவாகும். ஒரு நாளில் குறைந்த பட்சம் 2 வாழைப்பழமாவது உண்ண வேண்டும். ஒரு வாழைப்பழம் கட்டாயமாகும்.

உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் மூன்று வேளையும் உணவிற்கு பிறகு வாழைப்பழத்தை உண்பதை பழக்கப்படுத்திக் கொள்வது சிறந்தது.