உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் விவாதம்


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் விவாதம்

நாட்டின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பு தொடர்பில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்று (01.03.2023) நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளரை அழைத்து வருமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.