ஊழல் வழக்கில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஊழல் வழக்கில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு வெளிநாடு செல்ல அனுமதி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை சட்ட விரோதமாக பயன்படுத்திய குற்றத்திற்காகவே இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 30 ஆம் திகதி வரையில் இந்தியா செல்வதற்கு பௌசி அனுமதி கோரியிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே இராஜாங்க அமைச்சருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது