என்னை மூத்த நடிகை என்கின்றனர்…

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


என்னை மூத்த நடிகை என்கின்றனர்…

என்னை மூத்த நடிகை என்கின்றனர். இனிமேல் புதிய முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுவேன்” என்று காஜல் அகர்வால் கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கி விட்டேன். என் சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானபோது எந்த திட்டமும் இல்லை. டைரக்டர்கள் சொல்லி தந்ததை செய்தேன்.

திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக வளருவேன் என்றோ சினிமாதான் இனிமேல் என் உலகம் என்றோ அப்போது நினைத்து பார்க்கவில்லை. ஒவ்வொரு படத்திலும் முதல் நாள் நடிக்க செல்லும்போது இதுதான் எனது கடைசி படம் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் காலம் என்னை சினிமாவில் நிரந்தர நடிகையாக்கி விட்டது.

இப்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. எல்லோரும் என்னை மூத்த நடிகை என்று அழைக்கிறார்கள். இதனால் எனக்குள் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இனி புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன். வருகிற படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். கதாபாத்திரங்கள் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்க வேண்டும் அப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன்.

முன்புபோல் ஓடிக்கொண்டே இருக்க மாட்டேன். நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பேன். வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க முடிவு செய்து இருக்கிறேன்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.