எமி ஜாக்சனால் மன உளைச்சலில் தவிக்கும் இளைஞன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


எமி ஜாக்சனால் மன உளைச்சலில் தவிக்கும் இளைஞன்

மதராஸ பட்டணம்’ படத்தில் நடித்த எமி ஜாக்ஸன் குறைந்தளவே படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு வருகிறார்.

இந்தியில் கவுதம் மேனன் இயக்கிய ஏக் திவனா தா படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் ஜோடியாக நடித்த பிரதிக் பப்பருடன் காதல் மலர்ந்தது. வருடக்கணக்கில் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.

காதல் முறிந்த கையோடு அதை தூக்கி எறிந்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார் எமி. ஆனால் பிரதிக் இன்னமும் காதல் பிரிவால் தவித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’எமியை பிரிந்தபிறகு என்ன செய்யதென்று தெரியாமல் தவித்தேன். என் வாழ்க்கையில் வெற்றிடம் உருவாகிவிட்டது. இதயங்கள் உடைந்ததிலிருந்து நான் நிம்மதியாகவே இல்லை. எனக்கு ஒரு பார்ட்னர் (காதலி) தேவை என்பதற்காக இதை குறிப்பிடவில்லை. அதையும் தாண்டி என் வாழ்வில் ஒருவர் தேவைப்படுகிறார்.

காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கிறேன். ஒரு பெண்ணால் என் வாழ்வில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியும் என சுற்றியுள்ள நண்பர்கள் சொல்கிறார்கள். அதை ஒரு பெண்தான் நிறைவு செய்ய முடியும். எனக்கு அம்மா கிடையாது. பாட்டிதான் வளர்த்தார். அவரும் மறைந்தபிறகு வாழ்க்கை உறவு பிரிவின் வலி தெரிந்தது.

இன்னும் நான் காதலுக்கு தயாராகவில்லை. அதற்கு முன்னதாக ஆத்மார்த்மான தேடுதல் தேவைப்படுகிறது’ என்றார்.