எம்பிலிப்பிட்டிய மோதல் சம்பந்தமான இடைக்கால அறிக்கை சமர்பிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


எம்பிலிப்பிட்டிய மோதல் சம்பந்தமான இடைக்கால அறிக்கை சமர்பிப்பு

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் இடைக்கால் அறிக்கையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரால் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த அறிக்கை குறித்து பொலிஸ் ஆணைக்குழு தற்பொழுது கூடி ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் – அத தெரண