எரிபொருள் இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்


எரிபொருள் இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் பல சிக்கல்கள் ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருளை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.