எரிபொருள் விநியோகஸ்தர்களை தவிர்ந்து ஏனைய தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள், பெட்ரோலியப் பொருட்களை ஏனைய திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற வணிகங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.