எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 78 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.