மற்றொரு எரிவாயு அடுப்பு வெடித்தது


மற்றொரு எரிவாயு அடுப்பு வெடித்தது

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா – கிலரண்டன் மேற்பிரிவில் இன்று (7) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை பற்றவைத்தபோது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடிப்பு சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சமையலறைக்கும், சமையல் பாத்திரங்களுக்கும் மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தமிழ் செய்திகள்