எரிவாயு வரிசையில் நிற்போருக்கு ஒரு அறிவித்தல்


எரிவாயு வரிசையில் நிற்போருக்கு ஒரு அறிவித்தல்

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கவேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கனிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு விஷேட அறிவிப்பு