எலியை உயிருடனேயே சாப்பிடும் இளைஞர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


எலியை உயிருடனேயே சாப்பிடும் இளைஞர்

அவுஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார்.

அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோவில் அவர் தனது அறைக்குள் நுழைகிறார். உயிருடன் தயாராக இருக்கும் எலியை பிடித்து ‘ஒட்கா’ மதுவால் கழுவுகிறார். பின்னர் அதன் தலையை ‘நறுக்’ என கடித்து மென்று சாப்பிடுகிறார்.

இதற்கு ‘மேட் மாத்’ என பெயரிட்டுள்ளார். அந்த வீடியோவை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மிருக நலஆர்வலர்கள் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து மாத்யூ மலோனி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு ஏப்ரல் 6–ந் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.