ஏ.ஆர்.ரகுமான் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஏ.ஆர்.ரகுமான் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு

ஏ.ஆர்.ரகுமான் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. ‘நெஞ்சே எழு’ என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார்.

தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 23 ம் தேதி இலங்கையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் ஒருபக்கம் களைகட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

சென்னை முழுவதும் ஒரு அமைப்பு “தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டு சென்னை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

முருக சேனை என்ற அமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.