ஐ.எம்.எப் ஒரு பில்லியன் டொலர் கடன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஐ.எம்.எப் ஒரு பில்லியன் டொலர் கடன்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (ஐ.எம்.எப்.) இம்மாதம் முடிவதற்குள் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் கிடைக்கப் பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாணய நிதியம் மற்றும் நிதி அமைச்சு என்பவற்றுக்கிடையில் கடந்த நாட்களில் இது தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் இதன் விளைவாக இந்த கடன் தொகையை வழங்க அந்த நிதியம் அனுமதி வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.