ஐ.நா வின் அடுத்த பொதுச் செயலாளராக அந்தோனியோ குட்டெர்ஸ்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஐ.நா வின் அடுத்த பொதுச் செயலாளராக அந்தோனியோ குட்டெர்ஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில், ஐ நா பாதுகாப்பு குழுவிலிலுள்ள ஐந்து நிரந்திர உறுப்பினர்களில் யாரும் அவரை எதிர்க்கவில்லை.

இதனால் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் தெர்தெடுக்கபடுவது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் கடமையாற்றியவராவார்.

இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.