ஒபாமா செய்த பாரிய தவறை ஒபாமாவே கூறுகிறார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஒபாமா செய்த பாரிய தவறை ஒபாமாவே கூறுகிறார்

லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டமையானது தமது பதவிக்காலத்தில் தாம் இழைத்த மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“2011 ஆம் ஆண்டு லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து தெளிவான திட்டமிடல் இல்லாமற்போனது. இதில் லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் குறிப்பாக இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கெமருன் இந்த விவகாரத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார்”

என ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதாவது, லிபியாவில் அதிபராக இருந்த கடாபி புரட்சிக் குழுக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அந்நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உருவெடுத்தது.

 

அங்கிருந்துதான் உலகின் இதர நாடுகளுக்கும் ஐ.எஸ். இயக்கம் பரவியது. லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தெளிவான திட்டத்துடன் களமிறங்கியிருந்தால் ஐ.எஸ். இயக்கத்தின் மூலமான பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

ஆகையால், லிபியாவில் நேட்டோ படைகளின் தலையீட்டை ஏற்படுத்தியமை தமது பதவிக்காலத்தின் மிகப் பெரிய தவறாக ஒபாமா ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேபோல், தமது பதவிக்காலத்தின் சாதனையாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை மீட்டதைக் குறிப்பிடலாம் எனவும் ஒபாமா கூறியுள்ளார்.