ஒரே நாளில் முகப்பரு நீங்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் | Mugaparu neenga tips tamil – கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான்.
உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து விட்டால், அது உங்கள் முக அழகை பாழாக்கி விடும். இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தாவிட்டால் அதிகமாக முகப்பருக்கள் வந்துவிடும்.
பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் முகப்பரு பாதிக்கக்கூடியது. இது வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது.
அழகான முகத்தில் முதன் முதலில் முகப்பருக்களைப் பார்த்ததுமே சிலர் அதைக் கிள்ளி எறிய முயற்சி செய்வார்கள். இதனால் பருக்கள் அதிகமாகுமே தவிர குறையாது.
மேலும் சமயங்களில் அவை கருப்பு நிற தழும் பாக மாறி முகத்தின் நிறத்தையும் பொலிவையும் கெடுத்துவிட வாய்ப்புண்டு.
அதிலும் சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. எனவே இவற்றை ஆரம்பத்திலே கவனத்தில் கொள்வது நல்லது.
அந்தவகையில் முகப்பருவை போக்க கூடிய ஒரு சில இயற்கை முறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
முகத்தில் பரு வர காரணம் என்ன? Mugaparu vara karanam
முகப்பருக்கள் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஏற்பட, அடிப்படையான சில காரணங்கள் உள்ளன. அவை என்ன காரணங்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம்.
பொடுகுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.
பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும்.
தீராத பல் வலி நீங்க என்ன செய்ய வேண்டும்? 05 நிமிடங்களில் சரியாக மருந்து
தாங்க முடியாத பல் வலி உடனடியாக நீங்க இதை செய்தால் போதும்
கர்ப்பகால மார்பக வலிக்கு காரணம் என்ன? வலி நீங்க என்ன செய்யலாம்
பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும்.
முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.
நீண்ட நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மேலும், அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம்.
தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும்.
தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone) முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.
அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும்.
அதேபோல் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும்.
ஒரே நாளில் முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்
முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு.
பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும்.
அந்தவகையில் முகப்பரு உடனடியாக போக, முகப்பருக்களைப் போக்க ஒரு சில இயற்கை வழிகளை இங்கு பார்ப்போம்.
எலுமிச்சை புல் எண்ணெயை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.
இதில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும்.
சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.
புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும். இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும்.
முகப்பரு நீங்க கற்றாழை
கற்றாழை: அலோவேரா எனப்படும் கற்றாழை தோல் பராமரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் நம்பகமான பொருட்களில் ஒன்றாகும்.
இது சருமம் மென்மையாக இருப்பதற்கும் முகப்பருக்களை நீக்குவதற்கும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை முகப்பருவுக்கு மேல் பயன்படுத்துவதன் மூலம் ஒரே இரவில் பருவைத் நீக்க முடியும்.
முகப்பரு நீங்க வேப்பிலை
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.
கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும்.
முகப்பரு நீங்க எலுமிச்சை
எலுமிச்சை சாறு தொற்றுக்களை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதேபோல முகப்பருவை ஒரு சில நாட்களிலேயே சரிசெய்யும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உண்டு.
எலுமிச்சை சாறினை ஒரு காட்டனில் நனைத்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். உலர்ந்ததும் பின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை இப்படி செய்வதினால் முகப்பரு மற்றும் வடுக்கள் விரைவில் நீங்கும்.
முகப்பரு நீங்க ரோஸ்வாட்டர்
ரோஸ்வாட்டர் சருமத்துக்கு மென்மையைத் தருவதோடு, மிகச்சிறந்த டோனராகவும் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி பருக்களை வேகமாக விரட்டவும் இந்த ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
ரோஸ்வாட்டருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். இது நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
இரவு தூங்கும்போது இதை செய்து வருவது நல்லது. ஓரிரு நாளில் பருக்கள் மறைந்து முகம் க்ளியர் சருமமாக மாறும்.
முகப்பரு போக பூண்டு
பூண்டில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் மற்றும் ஆன்டி – வைரல் பண்புகள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்ய உதவுகிறது. குறிப்பாக முகப்பருக்களை மிக விரைவாகப் போக்கும் தன்மை கொண்டது.
பூண்டை இடித்து அதன் சாறினை ஏடுத்து சருமத்தில் பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்துவிட்டு படுத்து விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இது மிக வேகமாக பருக்கள் மறைய உதவும்.
முகப்பரு உடனடியாக போக எளிய வழிகள் – ஒரே நாளில் முகப்பரு நீங்க
இதுதவிர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை போக்க ஆவிபிடிப்பது கூட ஒரு நல்ல தீர்வாக அமையும்.
ஆவிபிடிப்பதால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்.
பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.
செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பெற, தினமும் முகத்துக்கு பயத்தமாவு, மஞ்சள் கலந்து பூசலாம்.