கச்சதீவு வருடாந்த உற்சவம் கோலாகலமாக ஆரம்பம்!


கச்சதீவு வருடாந்த உற்சவம் கோலாகலமாக ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இடம்பெறுகின்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 100 பக்தர்களும், இலங்கையிலிருந்து 2 ஆயிரத்து 800 பக்தர்களும் உட்பட 5 ஆயிரத்து 100 பேர் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை – இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இம்முறை வருடாந்த கச்ச தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதரகம், இலங்கையின வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்பொழுது, 60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும், இலங்கையிலிருந்து கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகள் மூலமும் 2800 பக்தர்களும், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100பேர் கச்ச தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின்