கச்சத்தீவை மீட்பது உறுதி என்கிறார் ஜெயலலிதா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கச்சத்தீவை மீட்பது உறுதி என்கிறார் ஜெயலலிதா

கச்சதீவு தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் ஜயலலிதா ஜயராம் மீண்டும் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கச்சதீவை எவ்வாறாவது மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட தவறிலிருந்து மீண்டு இந்திய மீனவர்களின் சம்பிரதாய உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் நாடு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் டி.எம்.கே.கட்சியின் தலைவர் எம். கருணாநிதியின் செயற்பாடு குறித்து விமர்சித்தார்.

கச்சதீவை மீட்பது தொடர்பில் கருணாநிதி அமைதி காப்பதாக தெரிவித்துள்ளார்.

கச்சதீவை இலங்கைக்கு வழங்குவதில் கருணாநிதியும் பங்காளராக இருந்தார் என தமிழ் நாடு முதலமைச்சர் ஜயலலிதா ஜயராம் மேலும் தெரிவித்துள்ளார்.