கடத்தப்பட்ட பாடசாலை மாணவிக்கு பல மாதங்களாக நடந்துள்ள துயர சம்பவம்


கடத்தப்பட்ட பாடசாலை மாணவிக்கு பல மாதங்களாக நடந்துள்ள துயர சம்பவம்

பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று அநுராதபுரம், ருவன்வெல்ல, ஹங்வெல்ல, வெயங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தடுத்து வைத்திருந்தார் எனக் கூறப்படும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வெயங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியாவார். சந்தேக நபர் வெயங்கொட பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாதவர்.

வெயங்கொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.