கடவுச்சீட்டு விண்ணப்பம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடவுச்சீட்டு விண்ணப்பம் பொறுப்பேற்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள சென்றவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் பத்தரமுல்லை பிரதான வீதியினை இன்று காலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பொரளை – கொட்டாவ, பொரளை – கடுவலை வீதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.