கட்டணம் செலுத்தாமல் ஹெலிகப்டர்களை பயன்படுத்தவில்லையாம் – ரணில் ஆவேசம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கட்டணம் செலுத்தாமல் ஹெலிகப்டர்களை பயன்படுத்தவில்லையாம் – ரணில் ஆவேசம்

விமானப் படையின் ஹெலிக்கொப்டர்களை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தவில்லை என, இன்று சில அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் சிலர் விமானப் படை விமானங்களை கட்டணம் செலுத்தாது பயன்படுத்தியதாக செய்திகள் வௌியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், இந்த செய்திகள் மூலம் அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் தவறான வின்பம் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை சரிபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை மேற்கோள்காட்டியே இந்த செய்திகள் வௌிவந்துள்ளன.

தாம் ஒருபோதும் தனிப்பட்ட பயணங்களுக்காக விமானங்களை பயன்படுத்தவில்லை எனவும், அரச பணிகளுக்காகவும் கூட விமானங்களுக்காக விண்ணப்பிக்கவில்லை எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் கலந்து கொண்ட அரசாங்க நிகழ்வுகளுக்காக அவர்களுடன் சென்ற அமைச்சர்களின் பெயர்கள் இவ்வாறு பட்டியலில் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை ஊடகங்களுக்கு சில பொறுப்புக்கள், கொள்கைகள் இருக்க வேண்டும் எனவும், பாராளுமன்ற செய்திகளை வௌியிட சில சம்பிரதாயங்கள், முறைகள் இருக்க வேண்டும் என, இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து பேசிய அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, எந்தவொரு அமைச்சரும் கட்டணம் செலுத்தாமல் விமானங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

ஊடகங்களில் தவறான செய்திகள் வௌியாகியுள்ளதாகவும், அந்த செய்திகள் குறித்தும் நேற்று தான் பாராளுமன்றத்தில் வழங்கிய அறிக்கை குறித்து விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராயத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.