கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

பிரசல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனினும் நேற்றைய தினம் முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகார சபை கூறியுள்ளது.

பயணிகளின் அனைத்துப் பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்பில் தாம் மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.

(அத தெரண தமிழ்)