கபாலி இலவச டிக்கெட் வேண்டுமா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கபாலி இலவச டிக்கெட் வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் புரொமோஷன்கள் வேறலெவலில் நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் பொது சேவை செய்யும் நபர்களுக்கு பரிசாக கபாலி படத்தின் டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாகவும், பொதுச்சேவையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி புதுவை கலெக்டர் மூலம் செய்யப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுனராக பதவியேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி கூறியுள்ளார்.
மேலும் அவர் புதுச்சேரியை தூய்மையாக்க ரஜினிகாந்த் பிராண்ட் அம்பாசிடராக வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்