கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு

இந்த முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்வி மற்றும் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் 100 பில்லியனுக்கும் அதிக தொகை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

குறைக்கப்பட்டுள்ள நிதியை பெற்றுக் கொள்ளும் வழியாக மக்கள் மீது சுமையை சுமத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களை 10 வீதத்தால் அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் குறைப்பு செய்யும் போது மேலும் நெருக்கடிகள் ஏற்படும் என்று லஹிரு வீரசேகர தெரிவித்தார்.