களனி கங்கையில் சடலமாக மிதந்து கொண்டிருந்த குழந்தை யாருடையது?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


களனி கங்கையில் சடலமாக மிதந்து கொண்டிருந்த குழந்தை யாருடையது?

நவகமுவ, உஸ்வத்தை தொட்டுப்பொலவிற்கு அருகாமையில் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நவகமுவ பொலிஸாரால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

08 மாதங்களேயான குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.