களனி கங்கையில் மூழ்கிய இரு சிறுமிகளும் சடலமாக மீட்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


களனி கங்கையில் மூழ்கிய இரு சிறுமிகளும் சடலமாக மீட்பு

வெல்லம்பிடிய பகுதியில் களனிய கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இரு சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 13 வயதான மூன்று சிறுமிகள் களனிய கங்கையில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர்.

அவர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் இவர்களது சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத தெரண தமிழ்