கிரிக்கட் வீரர் ஜனாதிபதியின் மகளுடன் காதலா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கிரிக்கட் வீரர் ஜனாதிபதியின் மகளுடன் காதலா?

ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகளான சத்துரிகா சிறிசேனவுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மிலிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

இணையங்களில் தனக்கும், ஜனாதிபதியின் மகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பொய்ப் பிரச்சாரங்கள் வெளிவருகின்றன. இதனால் தான் மிகவும் கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பொய்யான, அவதூறான செய்திகளால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மிலிந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனிப்பட்ட ரீதியில் தனக்கு சத்துரிக்காவை தெரியாது என்றும், இது ஒரு அரசியல் பிரச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ள மிலிந்த இது போன்ற செய்திகளால் விளையாட்டு வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் இருண்டு போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிலிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

குறித்த சர்ச்சைக்குரிய விடயத்தை சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.