குட்டி இளவரசர் பற்றி சுவாரசியமான தகவல்கள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


குட்டி இளவரசர் பற்றி சுவாரசியமான தகவல்கள்

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் இன்று தனது மூன்றாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

குறும்புத்தனங்களுக்கு சொந்தக்காரரான இவர், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் மூத்த மகன் ஆவார்.

இவரை பற்றி சுவாரசியமான விடயங்கள் சில,

விமானங்கள் மீது ஆசை

இளவரசர் ஜார்ஜ்க்கு விமானங்களை பார்த்தவுடன் ஒரு வித புத்துணர்ச்சி வந்துவிடும் அதனை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார், சமீபத்தில் பிரித்தானியாவின் விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற இவர், அங்கிருந்த விமானங்களில் தனது தாயுடன் ஏறி அமர்ந்துகொண்டு, அதன் பாகங்களை தொட்டு மகிழ்ந்துள்ளார்.

ஒரு விமானத்தில் மட்டுமல்லாமல் இரண்டு விமானங்களில் தன்னை அமரவைக்குமாறு தனது பெற்றோரை வற்புறுத்தி ஏறி அமர்ந்து கொண்டு தனது தந்தையிடம் “நான் பறக்கிறேன்” என சந்தோஷமாக கூறியுள்ளார்.

விளையாட்டு பொருட்கள்

வானத்தில் பறக்கும் விமானம் மட்டுமல்லாமல் தரையில் ஓடும் வாகனம் என்றாலும் ஜார்ஜ்க்கு பிடிக்கும், குறிப்பாக Tractors வண்டி என்றால், ஆசைப்பட்டு அதனை வாங்கி வைத்துக்கொண்டு தனது வீட்டில் ஓட்டி மகிழ்வாராம்.

பிடித்த புத்தகம்

விளையாட்டு பொருட்கள் மட்டுமல்லாது புத்தகங்களையும் ஜார்ஜ் படிப்பாராம், இவர் Anglia’s Children’s Hospice பள்ளியில் படிக்கும் இவருக்கு, Fireman Sam கதைப்புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும் என இவரது ஆசியர்கள் தெரிவித்துள்ளனர், இந்த புத்தகம் மட்டுமின்றி Gruffalo புத்தகத்தையும் விரும்பி படிப்பாராம்.

தந்தையின் ஸ்டைலில்

இளவரசர் ஜார்ஜ் அதிகமாக தனது தந்தை என்ன ஸ்டைலை பின்பற்றுகிறாரோ அதனையே செய்கிறாராம், ஏதேனும் விழாக்களுக்கு வெளியில் சென்றால், தனது தந்தை என்ன ஆடை அணிகிறாரோ அதே போன்று ஆடை அணிவது, அல்லது தனது தந்தை குழந்தைப்பருவத்தில் அணிந்த ஆடை போன்று இவரும் அணிந்துகொண்டு வெளியில் செல்கிறாராம்.

அதிபுத்திசாலி

நடிகை Sophie Winkleman மகள் Maud, இளவரசர் ஜார்ஜ்டன் நன்றாக விளையாடியுள்ளாராம், இதுகுறித்து நடிகை Sophie கூறியதாவது, இளரவசர் ஜார்ஜ் மிகவும் புத்திசாலி ஆவார், விளையாட்டு மற்றும் மற்றவர்களுடனும் மிக விரைவில் பேசிவிடுவார் என கூறியுள்ளார்.

செல்ல பெயர்

இளவரசர் வில்லியம் தனக்கு இரண்டாவது குழந்தை சார்லோட் பிறந்த பின்னர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அதில், இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதில் எனக்கு பொறுப்பு அதிகரித்து விட்டது, குறிப்பாக ஜார்ஜ் அதிகமாக சேட்டைகள் செய்வான், அவன் ஒரு குட்டி குரங்கு என செல்லமாக கூறியுள்ளார்.

மகாராணியை செல்லமாக அழைப்பார்

குட்டி இளவரசி சார்லோட் மிகவும் அமைதியாக இருப்பார் என்று கூறிய கேட் மிடில்டன், அவரது அண்ணன் ஜார்ஜ் அவரை அன்போடு, நன்றாக பார்த்துக்கொள்வார் என கூறியுள்ளார்.

இளவரசர் ஜார்ஜ், மகாராணி எலிசபெத்தை செல்லமாக Gan-Gan என அழைப்பார் என கூறியுள்ளார்.

மாமாவோடு விளையாடுவார்

ஜார்ஜ் தனது மாமா ஹரியுடன் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார், ஒருமுறை ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் Kensington அரண்மனைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஜார்ஜ், மாமா ஏன் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்துள்ளார், மேலும் தனது மாமா பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டால், ஜார்ஜ் மிகவும் வருத்தப்படுவாராம்.