சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்தி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளார்.
குமார் சங்கக்காரவை மகிந்த ராஜபக்ச தாக்கியுள்ளதாக செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே குமார சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், குறித்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இவ்வாறான செய்தியைப் பரப்புவோர் அது குறித்த ஆதாரங்கள் இருந்தால் முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.