குற்றம் செய்தவர்களும் மூடி மறைத்தவர்களும் வெளியே, கல்விக்காக போராடியவர்கள் உள்ளே!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


குற்றம் செய்தவர்களும் மூடி மறைத்தவர்களும் வெளியே, கல்விக்காக போராடியவர்கள் உள்ளே!

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்திற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட மாணவன் சனத் பண்டார கைதுசெய்யப்பட்டமைக்கு லஹிரு வீரசேகர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்கள் எப்பொழுதுமே போராடுவது கல்விக்காகவும், மாணவர்களுக்காகவும் மட்டும் தான், ஆனால் இதை தீர்த்து வைக்காத இந்த அரசு கைது நடவடிக்கைகளை மட்டும் சரியாக செய்து வருவதாக குற்றம் சுமத்தினார்.

அண்மையில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தாக்குதலை நடத்தியவர்கள் பொலிஸாரே. ஆனால் விசாரணைக்காக அழைத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளரான சனத் பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். இதுதான் பொலிஸார் நடத்தும் விசாரணைகளா? என லஹிரு வீரசேகர கேள்வி எழுப்பினார்.

வசீம் தாஜூடீனை கொலை செய்தவர்களும் அதை மூடி மறைத்த முக்கியமான குற்றவாளிகளும் வெளியில் சுதந்திரமாக சுற்றுகின்றார்கள். ஆனால் கல்விக்காக போராடியவர்கள் கூண்டிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள் எனவும் லஹிரு குறிப்பிட்டார்