கெய்லின் அதிரடியால் Guyana Amazon Warriors அணி வெற்றி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கெய்லின் அதிரடியால் Guyana Amazon Warriors அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகளில் நடை பெற்று வரும் CPL போட்டியில் ஜமைக்கா டல்லவாஸ்(Jamaica Tallawahs) கிறிஸ் கெய்ல்(Chris Gayle)-ன் அதிரடி ஆட்டத்தால் 3 வது வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகளில் நேற்று நடைபெற்ற CPL போட்டியின் 15 வது ஆட்டத்தில் Guyana Amazon Warriors மற்றும் Jamaica Tallawahs அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய Guyana Amazon Warriors அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் எடுத்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிவைன் ஸ்மித்(Dewayne Smith), மார்ட்டின் கப்டில்(Martin Guptill) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன, அதிகபட்சமாக ஜாசன் மொகமட்(Jason Mohammed) 51 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்து சற்று ஆறுதல் தந்தார்.

Guyana Amazon Warriors அணி சார்பில் டேல் ஸ்டைன் (Dale Steyn) மற்றும் இமாட் வாசிம்(Immad Wasim) தலா இரண்டு விக்கெட்கள் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய Jamaica Tallawahs அணி எளிய இலக்கு என்பதால் கிறிஸ் கெய்ல் தொடக்க ஆட்டக்காரராக இறங்காமல் ஆண்ட்ரே மெக்கார்தி(Andre McCarthy) இறங்கினார்.

எனினும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர், அடுத்து வந்த சங்காராவும் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால் அணியை காப்பாற்றும் முயற்சியாக சாகிப் அல்ஹசன் (Shakip Al Hasan) மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர்.

தொடக்கத்தில் சற்று மெதுவாக ஆட்டத்தை ஆரம்பித்த கிறிஸ் கெய்ல், பிறகு தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். இதனால் Guyana Amazon Warriors அணி 15.5 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதற்கு உறுதுணையாக இருந்த சாகிப் அல்ஹசன் 47 பந்தில் 54 ஓட்டங்களும், கிறிஸ் கெய்ல் 29 பந்தில் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

அணியின் வெற்றிக்கு உதவிய சாகிப் அல்ஹசன் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும் 7 வது ஆட்டத்தில் ஆடிய Guyana Amazon Warriors அணிக்கு இது 2 வது தோல்வியாகும். ஐந்தாவது ஆட்டத்தில் ஆடிய Jamaica Tallawahs அணிக்கு இது 3 வது வெற்றியாகும்